சித்தர்களின் மேலான தெய்வம்!

சித்தமெல்லாம் சிவமயமாய் திளைத்திருக்க, ஆதிசக்தியின் அருளும், ஆசியும் பூரணமாக தேவைப் படும். இதை உணர்ந்திருந்த சித்தர்கள்,

சித்தர்களின் மேலான தெய்வம்!

சித்தர்களின் மேலான தெய்வம்!
வாலை பூசையின்  ரகசியம் ...
 ஸ்ரீ  பாலா மந்திரம்

பெண்மையை இழிவு செய்தவர்கள், அல்லது
தூற்றியவர்கள் என்பதாகவே சித்தர்களைப்
பற்றி பெரும் பாலானவர்களால் புரிந்து
கொள்ளப் படுகிறது. அத்தகைய ஒரு எண்ணப்
போக்கினை இந்தபதிவு தகர்த்திடும் என
எதிர்பார்க்கிறேன்.

சித்தமெல்லாம் சிவமயமாய் திளைத்திருக்க,
ஆதிசக்தியின் அருளும், ஆசியும் பூரணமாக
தேவைப் படும். இதை உணர்ந்திருந்த
சித்தர்கள், அத்தகைய ஆதிசக்தியின் அம்சம்
ஒன்றினையே போற்றி பூசித்தனர்.இந்த
அம்சம் பத்து வயதுக்குறிய ஒரு சின்னஞ்
சிறிய பெண்ணின் அம்சம் என்பது
ஆச்சர்யமான ஒன்று!, நம்மில் பலரும்
அறிந்திராத ஒன்று.

இந்த உயர் தெய்வத்தைப் பற்றி கொங்கணவர்
பின்வருமாறு கூறுகிறார்.

"வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ? வாலைப்
பெண்ணே!"
- கொங்கணவர் -

சித்தர்கள் வணங்கிய அந்த பால தெய்வத்தின்
பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின்
பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை.

அனைத்திற்க்கும் ஆதி காரணமான இந்த
வாலை தெய்வத்தையே சித்தர்கள் அகப்புற
வழிகளில் பூசை செய்தார்கள். இந்த
வாலையை பூசிக்காத சித்தர்கள் யாருமே
இல்லை. இவள் அருமையை போற்றிப் பாடாத
சித்தர்களும் இல்லை எனலாம்.

இத்தகைய வாலை தெய்வம் நமது உடலில்
இருந்து இயங்குவதை உணர்ந்து கொண்டு
அவளே அனைத்திற்கும் காரண காரியமாக
இருந்து ஆட்டுவிப்பதை அறிந்து எல்லாவித
யோகா ஞானங்களுக்கும் அவளே
தலைமைத்தாய் என்று அறுதியிட்டு உரைத்த
சித்தர்கள். அவளையே போற்றி பூசித்து சித்தி
பெற்றனர்.

சின்னஞ்சிறு பெண்ணான வாலையின்
அருளால் சித்தியடைந்து, பின் அவளை
கண்ணித் தெய்வமாக வழிபட்டு படிப்படியாக
மனோன்மணித் தெய்வமாக பூசை முடித்து,
இறுதியில் ஆதிசக்தியின் அருள் பெற்று முக்தி
நிலையான மெய்ஞான நிலையினை
அடைந்தனர். இதுவே ஞானத்தின் அதி உயர்
நிலையாக கருதப் பட்டது. இந்த நிலை
எய்தியவர்களே சித்த புருஷர்கள்.

வாலை பூசை என்பது என்ன?
இதன் அருமையினை அகத்தியர் பின் வருமாறு
விளக்குகிறார்

"கூடப்பா துரியமென்ற வாலை வீடு
கூறரிய நாதர் மகேச்சுவரியே யென்பர்
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு
நந்திசொல்லும் சிங்காரம் தோன்றும்
தோன்றும்
ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும்
ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊறலாகும்
தேடப்பா இது தேடு காரியம் ஆகும்
செகத்திலே இதுவல்லவோ சித்தியாமே
வாமென்ற அவள் பாதம் பூசை பண்ணு
மற்றொன்றும் பூசை அல்ல
மகனேசொன்னேன்!"
- அகத்தியர் -

இத்தனை சிறப்பான வாலை பூசையின்
 இரகசியம் என்ன?

 வாலை பூசையின் ரகசியம்...

பாலாம்பிகையான வாலையை அனைத்துக்கும்
ஆதாரமானவள். இந்த ஆதார சக்தியினை
வழிபட அகாரம், (சிகாரம்) உகாரம், மகாரம்
என்ற மூன்றேழுத்து ஓங்கார மந்திரமே மூல
மந்திரமாகும். வாலையை தங்கள் உடலில்
இனங்கண்டு, இந்த ஓங்காரத்தின்
உட்பொருளை உணர்ந்து அதன் வழி நின்று
சித்தியடைவதுதான் வாலைபூசையின்
நோக்கம்.

இதன் மகத்துவத்தினை கொங்கணவர் பின்
வருமாறு கூறுகிறார்.

"மாதா பிதா கூட இல்லாமலே வெளி பல்லே
மண்ணும் விண்ணும் உண்டு பண்ணவென்று
பேதைப்பெண் ணாமுதல்
வாலைப்பெண்ணாளென்று
புகுந்தா ளிந்த புவியடக்கம் "
- கொங்கணவர் -

"மனமு மதியு மில்லாவி டில்வழி
மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்
மனமுறுதியும் வைக்க வேணும் பின்னும்
வாலை கிருபையுண் டாகவேணும்"
- கொங்கணவர் -

"வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை
வாய் கொண்டு சொல்பவர் யார் காணும்
மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் மத்திமமுங்கூட்டி
விரைந்து பாரடி ஞானப் பெண்ணே.!"
- வாலைக் கும்மி -

கருவூரார் தனது கருவூரார் பூஜாவிதி
என்னும் நூலில் வாலை பூசை பற்றி இப்படி
சொல்கிறார்..

"பத்து வயதாகும் வாலையவள்
மர்மம் வைத்து பூசை பண்ண
மதியுனக்கு வேணுமடா அதிகமாக
கனரிது சிறு பிள்ளை கன்னி கன்னி
ஆமிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்
அறிந்ததுமே மன அடக்கம் வந்து சேரும்
நாட்டிலே சொன்னாயானால் நகைப்பர்"

வாலையின் மந்திரம் அ+உ+ம் என்னும்
ஓங்கார அட்சரங்களும், அதை மாற்றி வரும் ம்
+உ+அ (முருகா) என்னும் அட்சரங்களுமே
ஆகும். இதுவே வாலை பூசையின் இரகசிய
மந்திரமும், வாலைப் பூசையின் சூட்சுமமும்
ஆகும்.

வாலையின் யந்திரம் - முக்கோண பீடம்
வாலையின் மந்திரம் - அ+உ+ம் , ம்+உ+அ.
ஆகவே, அகிலமெங்கும் நீக்கமற
நிறைந்திருக்கும் இந்த வாலை தெய்வத்தை
புற நிலையில் அல்லாமல் அக நிலையில்
தெரிந்து கொண்டு , உணர்வைவும்,
நினைவையும் ஒன்றாக்கி, சித்தத்தில்
பரம்பொருளுடன் சேர இவ் வாலைப்
பூசையை கைக்கொண்டு சித்திபெற
வழிகாட்டுகிறார்கள் சித்தர்கள்.

ஆர்வமும், தீவிரமும் உள்ள எவரும் சித்தர்கள்
வழி சென்று சித்தி பெறலாம்.

இந்த வாலை பூசை முறைகளை சிறந்த
குருவின் வழிகாட்டல் மூலம் பெற்று நாமும்
பயனடைந்து மற்றவர் பயனடைய வழி
காட்டுவோமாக...!

வாயு மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமு மாமே
- திருமந்திரம்

மனதை உன் மணியில் வைத்தால்!
மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள்
காட்சி கிடைக்கும்! மணம் அங்கே நிறுத்தி
கண்மணியில் நிறுத்தி தவம்
செய்யும்போது அங்குள்ள ஒளி வாயுவால்
பெரிதாகும்! கண்மணி சுழல சுழல
காற்று வேகமாகி ஒளியை பேருக்கும்!

“மன்மணம் எங்குண்டு வாயு
அங்குண்டு” இதுவும் ஞானியின் கூற்றே!
அந்த மனோன்மணிதாய்க்கு வாலைக்கு அகில
லோக அன்னைக்கு சேவகம்
செய்ய காத்திருக்கும் பேயும் பூதகணங்களும்
2 கோடியாகும்! அவ்வாறு உள்ள
2 கோடி பூதகணங்கள் தான் தாயின்
கட்டளையை நிறைவேற்றும் சேவகர்கள்!
மிகப்பெரிய இரகசியம் இது!

சித்தர் சொன்ன இரகசியம் !

ஆய்ந்து அறிந்து அறிய முடியாத
மனோவாக்கு காயத்துக்கு அப்பாற்பட்ட அந்த
அரணுக்கு இவளே எல்லாமாம்!
ஆதி சக்தியாக படைத்ததால் தாய்!
சிவத்தோடு சக்தியாக ஒளியோடு ஒலியாக
இரண்டற கலந்து நிற்பதால் சிவசக்தியாய்
துலங்குவதால் மனைவி!
உயிரெல்லாம் சக்தியம் சமல்லவா சிவம்
படைத்தாரல்லவா எனவே உயிரை
படைத்ததால் உயிராக உள் பாதியாக சக்தி
துலங்குவதால் மகளுமாவாள்!

ஆஹா அற்புதம்! எவ்வளவு பெரிய உண்மை
இது!

ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்கள்
பரிபாலனம் செய்வதற்காக பூதகணங்கள்
உள்ளன!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கில்
உள்ளது!

“நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலாயிரம் பேர்”
முருகப் பெருமானின் பூதகணங்களின்
எண்ணிக்கை நாலாயிரம்!
வீரபாகு முதலானவர்கள்! முருகனின் கணங்கள்
தன முதலில் வந்து அடித்து நொறுக்கி நம்மை
பக்குவபடுத்தி ஞானபாதைக்கு அழைத்து
செல்வர்!

தாயே வாலையே என மகாமாயையைப்
பணிந்தால் அரவணைப்பாள்!
மும்மலத்தில் பெரியது மாயை!
எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிப்பாள்!

தாயே என்று சரணடைந்தால் மட்டுமே
தப்பலாம்!
உலகத்திலுள்ள எல்லா பெண்களையும் தாயாக
பார்த்தால் மட்டுமே தப்பலாம்!
அபிராமி பட்டரைப் போல!
அழுதால் அமுதம் தருவாள்!
ஞானசம்பந்தருக்கு தந்தது போல!
பசித்தால் சோறு தருவாள் வள்ளலாருக்கு
தந்ததை போல!

இன்னும் சொல்லி கொண்டே போகலாம்
அன்னையின் மகிமையை!!
அடியேனையும் சாவிலிருந்து காத்தருளினாள்!

இன்றும் படியளக்கிறாள் அவள் சொன்னது
போல!
எம்மை பொறுத்தவரை எல்லாமே தாய்தான்!
வாலை தான்!

 பாலாதிரிபுர  சுந்தரி 

 விளக்கம்.

பெண் என்பவள் சக்தி,ஆண் என்பவன்
சிவம்.ஆண் இருப்பு,பெண் இயக்கம், இயக்கம்
இல்லா இருப்பு உபயோகம் அற்றது.பிரபஞ்சத
்தில் இருக்கிற அனைத்துமே இவ்விரு
தத்துவங்களுக்குள்ளே அடங்குவதை நாம்
தெளிவுற சிந்திக்கும் போது
புலப்படும்.மேலும் பிரபஞ்சத்தில் இருக்கிற
ஐந்து சக்திகளான பஞ்ச பூத தத்துவங்களான
நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்
ஆகியவகைகளின் அடிப்படையில்தான் நம்
ஞானிகளும் சித்தர்களும் பூமியில் இருக்கிற
அனைத்து விசயங்களிலும் உட்புகுத்தி அதன்
செயல் சூத்திரங்களையும் கணக்கிட்டார்கள்
.இப் பஞ்ச பூத தத்துவத்தில் இருப்பு
சிவனாகவும்,இயக்கம் சக்தியாகவும் கொண்டு
பல சூட்சுமங்களை உணர்த்திருக்கிற
ார்கள்.மனிதனின் உருவாக்கத்தில் சக்தியும்
சிவனும் மட்டுமே இயங்குவதாக கண்டார்கள்.

இதில் இருப்பு சிவனை விட இயக்க சக்தி
பெரும் சக்தி வாய்ந்ததாக உணர்ந்ததால் தான்
இயக்கத்தின் ஆதி கடவுளாக ஆதிபராசக்தியை
கொண்டு அச்சக்திக்கு பெண் வடிவமும்
கொடுத்தனர். மேலும் நாம் வணங்குகிற
அனைத்து கடவுள்களிலும் மேற்கூறிய
தத்துவங்களின் அடிப்படையில்தான்
சித்தரித்து இருக்கிறார்கள்.சிவம் சக்தி
இரண்டையும் ஜோதிட தத்துவத்தில் சூரியன்
சந்திரனுக்கு ஒப்பிட்டு பூமியின் இயக்கத்தை
இரவு,பகல்,நாள் நட்சத்திரம்,திதி இவைகளின்
கணக்குகளின் மூலமாக கொண்டிருப்பார்க
ள்.மேற்கத்திய ஜோதிடத்தில் சூரியனை
மட்டுமே கணக்கெடுப்பதால் நம் நாட்டின்
ஜோதிடத்தில் இருக்கிற தீர்க்கம் அங்கு
கிடைப்பதில்லை.

உயிர் ஜனித்ததிலிருந்து 12 ஆண்டுகளுக்கு
ஒரு முறை அவ்வுயிரின் நிலை மாறி அடுத்த
நிலை அடையும்.இது ஜனன கால குருவின்
சுழற்சியை கணகெடுத்து சொல்லபட்டு
இருக்கிற ஒரு விஷயம். சக்தியின் இயக்கமான
பெண்ணில் இத்தன்மை பெரிய மாற்றங்களை
ஏற்படுத்துகிறது.பெண்ணில் முதல் 12
ஆண்டுகள் முடிவுறுகிற தருவாயில் அடுத்த
நிலைக்கு சக்தியினை உருவாக்கி ஒரு சக்தி
பிரவாகமாக மாற்றுகிற காலம். ஆம் ஓர்
உயிரிலிருந்து இன்னொரு உயிரை
உருவாக்குவதற்கு உண்டான சக்தி மைய
இயக்கத்தின் ஆரம்பம். ஒரு அணுவே பிரித்தால்
பல அணுக்தளாக பிரிவதன் ரகசியம் அறிய
முற்பட்டால் சக்தி சிவன் மூலம் உற்பத்தியின்
ரகசியம் அறியலாம் ஓர் உயிரை
ஜனனிப்பதற்க்கு உண்டான கருவறை
திறப்பு,கோவில் கும்பாபிஷேகம். ஒளியாக
இருந்து ஒளி பிழம்பாக உருமாறுகிற
பருவம்.இந்த ருது, பெண் வடிவத்தை தாயாக
சக்தியாக சக்தியின் திரளாக உருவெடுக்கும்
நேரம். இது சக்தியாக பெண்ணிற்கு மட்டுமே
ஏற்படுகிற இயற்க்கை தந்த வரம்.

இத்தன்மையில் அந்த பெண்ணின் உடலில்
பிரபஞ்ச சக்தியின் வலிமை இறங்கி இருக்கிற
நேரம். நம் வீட்டில் இருக்கும் 12 -13 வயது
பெண்ணை பாருங்கள் புரியும். குழந்தை தனம்
மாறி உடலில் மாற்றங்களை மட்டுமே நாம்
வெளிப்படையாக காணமுடியும் அனால்
சூட்சுமத்தில் பெரிய சக்தி வடிவமாக
இருப்பார்கள்.

அச்சக்தியின் வடிவம்தான் பாலாதிரிபுரசுந்தரி
அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக
பெரிய சக்தி அவள்.பால பருவத்தின் இறுதி
நிலை குழந்தையும் தெய்வீகமும்
தாண்டவமாடும் வசீகர முகம்.
இப் பெண் என்ற சக்தி மையத்திற்கு 3
நிலைகள் முக்கியமாக கருதபடுகிறது.

1.ருது என்கிற கர்ப்பகிரக திறப்பு 2.சக்தி
சிவனை ஆகர்ஷணமாக்கி தன்னுள் அடக்குகிற
முதல் தாம்பத்திய உறவு 3.சக்தி,சிவம் உரு
கருவாகி இருக்கிற கர்ப்ப காலம்.இம்மூன்று
தன்மைகளிலும் பெண் ஜொலிப்பாள்.அவர்
களுடைய முகம் ஒரு பொலிவு பெற்று
தெய்வீக தன்மையை வெளிபடுத்துவதை
காணலாம்.

பெண் ருதுவாகி சக்தியாகின்ற அந்த யோனி
திறப்பை இன்றும் மிக பெரிய சக்தி விழாவாக
மேற்கு வங்காளம்,கவுகாத்தியில் உள்ள
காமாக்கினி கோவிலில் காணலாம்.அவ்விழா
வில் சாதுக்கள்,சித்தர்கள்,நாகாக்கள்
,பெருவாரியாக கலந்து கொள்கிற வருடத்திற்கு
ஒருமுறை நடக்கின்ற மிக பெரிய விழா அது.

பெண்ணாகிய சக்தியில் இவ்வுண்ணதத்தை
உணர்ந்து தான் நம் முன்னோர்கள்
சக்தியில்லையேல் சிவன் இல்லை என்று
கேந்திரத்தை இயக்குகிற திரிகோணத்தை
போற்றி உள்ளனர்.இச்சக்தியை பெண்ணை
போற்றுவோம்,வணங்குவோம் .

ஸ்ரீ பாலா மந்திரம்.

மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக
வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே
விரும்பி எடுத்துக்கொண்ட
குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ
பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி
முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி
அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட
தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரிய
ே.எல்லா யோகிகளுக்கும் யோக
முதிர்சசியின் போது அன்னை ஸ்ரீ பாலா
திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள்
என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன
மேலும்
சில சூபி ஞானியாரின்
பாடல்களும் நூல்களும் இதை
ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,சிததர்
களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான்
இருக்கிறான் என்று கூறுகின்றனர்

ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு
புரிந்தாலும் எவ்வாறு,எங்கு நமக்குள்
உள்ளான் என்று நமக்கு நாமே
கேட்டுக்கொண்டால் பதில் உண்டா
நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை
ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே
வெளிப்படுகின்றது
பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய
நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து
செல்லும் கருணைக்கடல்.

சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது
அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும்
ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின்
செயல் ரூபமே சக்தி.

ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை விட
மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட
தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச்
செல்லும்.பீஜம் என்றால் விதை எப்படி
விதைக்குள் மரம் அடக்கமோ அப்படி
பீஜத்திற்க்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே
பீஜ மந்திரஜபம் உயர்வாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :

1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி
மந்திரம்:-

ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|

இதில் சௌம் என்பதை "சௌஹூம் "என்று
சொல்லுவது சிறந்தது.

ஐம் - என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.-
பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம்
மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்),வ
ாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.

க்லீம் - என்ற பீஜம் காமராஜபீஜம்
எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி,
மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல
செல்வம்,செல்வாக்கு,கௌரவம்,வசீக
ரசக்தி,உடல்,மன பலம் இவற்றை தரும்.

சௌஹூம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,ம
ுருகன் இவர்கள் அடக்கம்.சௌம் என்ற பீஜத்தில்
இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை
தோன்றியதாக வேதம் கூறுகிறது.இப்பீஜம்
சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.

இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும்
ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ
பாலா திரிபுரசுந்தரி அன்னை.இவள்
மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு
வாழ்ந்து ஆன்மீகத்திலும் ,வாழ்விலும் உயர்ந்த
நிலையை அடையலாம்.

2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி
மந்திரம்:-

ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||

3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி
மந்திரம்:-

ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம்
க்லீம் சௌம்||

முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த
பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும்
ஜெபிக்க உத்தமம்.

இந்த தாயை வாலை என்றும் பாலம்பிகா
என்றும் அழைப்பர். சித்தர்கள் அனைவரும்
தங்களின் பாடலில் வாலை கும்மி பாடி
வணங்கி தொடங்குகின்றனர். 

வாலை தாய்
அன்னை அதிபராசக்தியின் 10 வயது பால
பருவமாக காட்சியளித்த தோற்றம். சித்தர்
களின் தலைவன் முருக பெருமானை வணங்கி
வந்தால் அன்னை வாலை தாய் அருள் புரிந்து,
சித்தி பெற முடியும். முக்தியடைய முடியும்.
சக்தியை பெற்று பரம்பொருளுடன் இணைத்து
முக்தியடைய முடியும்.

வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று
சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை
ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள்
நம்மனைவரையும் வாழ்விலும்
ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர
வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க
வேண்டுகிறேன்.

  வாலைசக்தி மந்திரம் !
*********

"ஓம் ஐம் க்லீம் சௌம்
க்லீம் ஐம் க்லீம் ஐம் சௌ
ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் சங் ஹங்
ஸ்ரீ பாலபரமேஸ்வரி மமமுக கமல
வாஸின்யை ஸ்வாஹ..."

இந்த மந்திரம் பலவித ஆற்றல்களைத்
தரவல்லது. ஆனால் முறைப்படி சொல்லிப்
பழகிய குருவின் வழி இந்த மந்திரத்தை
கேட்பதால் மட்டுமே முழுப்பயன் கிட்டும்.

 பாலா திரிபுரசுந்தரி -வாலை பூசை : ‘பாலா’-பாலாம்பிகை பாலா திரிபுரசுந்தரி என்று போற்றப்படுபவள். எப்போதும் ஒன்பது வயது உடையவளாகத் தோன்றுபவள் பாலாதேவி. செங்கழுநீர்ப் பூமேல் அமர்ந்து, ஜபமாலையும் புத்தகமும் தாங்கி, அபயமும் வரதமும் காட்டி, சிவந்த திருமேனியுடன் திகழ்பவள் பாலா திரிபுரசுந்தரி. இவளுடைய மந்திரமான பாலா மந்திரமே முதலில் ஸ்ரீவித்யாவில் உபதேசிக்கப்படும். அம்மந்திரத்தை எளிதில் ஜபித்து அதிகமான பலன்களை அடையலாம். எனவே, பாலா மந்திரத்தை, ‘லகு ஸ்ரீவித்தை’ என்பர். பாலா மந்திரத்தை ஒரு கோடி முறை ஜபிக்க சித்திகள் தாமாகவே வந்து சேரும் இதன் அருமையினை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார் "கூடப்பா துரியமென்ற வாலை வீடு கூறரிய நாதர் மகேச்சுவரியே யென்பர் நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு நந்திசொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும் ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும் ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊறலாகும் தேடப்பா இது தேடு காரியம் ஆகும் செகத்திலே இதுவல்லவோ சித்தியாமே வாமென்ற அவள் பாதம் பூசை பண்ணு மற்றொன்றும் பூசை அல்ல மகனேசொன்னேன்!" சித்தர் வழியில் செல்பவர்களுக்கு மட்டுமே இந்த வாலை என்னும் தெய்வத்தை பற்றி தெரியும் . சித்தர்கள் நம்மை அப்பனிடம் சேர்க்கும்அன்னை
யாக இருப்பவள் . இவளை பற்றி தெரிய வேண்டும் என்றாலே விட்ட குறை வேண்டும் என்கிறார் கொங்கனவர் தம் பாடல்களில் . நந்தவனத்திலே சோதியுண்டு நிலம் நித்திய பேருக்கு நெல்லுமுண்டு விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில் விட்டகுறை வேணும் ஞானப்பெண்ணே என்கிறார் . இது மட்டுமல்ல வாலையை பற்றி தம்முடைய வாலைக்கும்மி பாடல்களில் நிறைய கூறுகிறார் . வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங் காப்பது சேலைக்கு மேலுமில்லை பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக் கும்மிக்கு மேலான பாடலில்லை என்று இந்த வாலை தெய்வத்தின் மகிமையை நமக்கு அறிவுறுத்துகிறார் .ஆத்மாவை பரமாத்மாவிடம் கொண்டு செல்ல வாலையால் மட்டுமே இயலும் இவளை பாடாத சித்தரில்லை , என்னும் அளவிற்கு எல்லா சித்தர்களும் இவளை பாடி பணிந்திருக்கிறார்கள் . மாயையும் அவளே , மாயையை இவள் தான் உண்டு பண்ணுகிறாள் என்பதையும் கொங்கணர் அழகாக எடுத்து வைக்கிறார் பாருங்கள் அஞ்சு பூதத்தை யுண்டு பண்ணிக் கூட்டில் ஆறா தாரத்தை யுண்டு பண்ணிக் கொஞ்ச பெண்ணாசை யுண்டு பண்ணி வாலை கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள் நம்முடைய ஆன்மீக ஞானத்தை சோதித்து நம்மை சுற்றி மாயைகளை உருவாக்கி அதற்குள்ளே விழச் செய்திடுவாள் நாம் விழுந்து விட்டோமேயானால் முக்தியில்லை இதைத்தான் சிவவாக்கியர் தனது பாடலில் .. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களுங் கழிந்து போய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே ஆகவே அவளையே சரணாகதியாக , அப்பனிடம் நம்மை அவளால் மட்டுமே கொண்டு சேர்க்க முடியும் என்று அவளையே கதியாக இருந்தோமேயானால் நம்மை கண்ணைப் போல காத்திடுவாள் . குழந்தை தானே அன்போடு அவளை அழைத்தாள் உடனே வருவாள் . மந்திரத்திற்கும் , தந்திரத்திற்கும் அப்பாற்பட்டவள் , எதற்குள்ளும் அடங்காதவள் அன்பு என்னும் ஒரே சொல் தான் அவளை நம்மோடு இருக்க வைக்கும் . மற்ற எதுவும் இவளைக் கட்டுப்படுத்தாது . ஈசனும் , அவளும் வேறில்லை . கொங்கனவர் கூறுகிறார் கேளுங்கள் … காலனைக் காலாலுதைத் தவளாம் வாலை ஆலகா லவிட முண்ட வளாம் மாளாச் செகத்தை படைத்தவளா மிந்த மானுடக் கோட்டை இடித்தவளாம் .

 வாலை தேவி பூசை குறித்து -மச்சமுனி வாலையைக் கண்டு வணங்கி நீ மைந்தா காலையு மாலையுங் கருத்தாய் வணங்கினால் ஆலைய மாகு மவனுருத் தானுந் தாழ்வது மில்லைத் தவமதுவாமே தவமது வாக சாத்துவோங் கேளு உவமான மில்லை யோங்கார வட்டத்துள்i சிவமான விந்துவைச் ம்மென்று பூசைசெய் நவமாந் திரேகம் நலச்சிவ யோகமே முத்திக் கொழுந்து முனைகொண்ட தீபம் நித்திப் பிடிக்கும்  பதிவான வாசியை நித்தமும் நோக்கி நேர்நிலைக் கண்டால் சித்தம் பெருகி சிவனவ னாமே

நன்றி.

ஓம் சர்வம் சிவார்ப்பணம்.

What's Your Reaction?

like
3
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0