காலத்தால் மறைக்கப்பட்ட உச்சிஷ்ட கணபதி மந்திர ரகசியம்

காலத்தால் மறைக்கப்பட்ட உச்சிஷ்ட கணபதி மந்திர ரகசியம்

(சிறுவயதிலேயே சோட்டாணிக்கரை க்ரிஷ்ணஸ்வாமி நம்பூதரிகளிடம் அதர்வண வேதம் பயிலும் போது , என் குருநாதர் எனக்கு சொன்ன அனைத்து காரியங்களையும் சித்தி செய்யும் உத்திஷ்ட கணபதி பற்றிய அபூர்வ  ரகசிய வழிபாட்டு முறைகள் , மந்திர ரகசியங்கள் , முழுமையான உபாசனைகள் , மந்திர ஜெபங்கள் என்பவற்றை பற்றி  என் திருமந்திர whatsaap வகுப்பில் விரிவாக கற்பித்தேன். இன்று அந்த வகுப்பின் பதிவுகளை நம் சித்தர்களின் குரலில்  பதிவிடுகிறேன்.)

உச்சிஷ்ட கணபதியை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. ஜோதிட  மற்றும் யோக , மந்திர சாதனைகளில்  உலகில் இருப்பவர்கள் இவருடைய அருமை பெருமைகளை அறிந்து இருப்பார்கள் பல பேர் பூஜை செய்தும் வருகிறார்கள் . 

உச்சிஷ்டம் என்றால் என்ன ?
***********

 உச்சிஷ்டம் மிச்சம் அல்லது எச்சம்  . இந்த உலகில் படைக்க பட்ட அனைத்தும் அழிகின்றன ஆனால் முழுமையாக அழிகின்றனவா என்றால் உண்மையில் இல்லை என்பது தான் உண்மை. அனைத்திலும் ஒன்று மிச்சம் இருக்கும் .

 இந்த உலகம் அழியும் பொழுதும்  மூன்று வஸ்துகளாகிய  நிலம் நீர் நெருப்பு இந்த மூன்றில் ஒன்று மிச்சம் இருக்கும். இந்த மூன்றில் ஒன்றாலேயே உலகமும் அழியும் .  இப்படி ஆக்கலும் அழித்தலும் ஒன்றாய் நிற்கும் சக்தியே உச்சிஷ்டம்  அவரே உச்சிஷ்ட கணபதி என அதர்வ வேதம் கூறுகிறது. . 

சிலர் இவரை உக்கிரமான  கணபதி என்பர் ஒரு சிலர்.  உச்சிஷ்டம் என்பதை உக்கிரம் என்று தவறாக புரிந்து கொண்டு அப்படி சொல்வர் . படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று வஸ்துக்களும் இணைந்த ஒரு சக்தியே உச்சிஷ்டம் .  மூன்றும் முடிவில் நிலை பெறுவது உச்சிஷ்டத்திலேயே .

 சிவன் பிரம்மா விஷ்ணு என்ற மூன்று சக்தியின் முத்தொழிலையும் உடையவர் . மாந்த்ரீகம் மற்றும் ஜோதிடர்களுக்கு முக்காலத்தையும் உணர வைப்பவர்.  சரியாக ஜோதிடம் கற்காதவர்  கூட  உச்சிஷ்ட உபாசனை மூலம் நல்ல சரியான பலனை கூற முடியும் . மாந்த்ரீகத்தில்  இவரை கொண்டு செய்ய முடியாத காரியங்களே இல்லை . 

உச்சிஷ்ட கணபதி மந்திரம் 
**********

இதில் 9 அக்ஷரம் 12 அக்ஷரம் 31 , 41 என பல அக்ஷர மந்திரங்கள் உண்டு ... 

எந்த மந்திரம் நமக்கு ஏற்றது என்பதை  நமது பூர்வ  புண்ணியமும் குருவின் ஆசியுமே முடிவு செய்யும். எல்லாரும் எல்லா அக்ஷரங்களையும் பயன்படுத்த முடியாது. உச்சிஷ்ட கணபதி உபாசனை  எல்லாராலும் செய்ய முடியாது. அதற்கு என தனியாக   ஜாதக  அமைப்பு உண்டு ,  புதன் கேது தொடர்பு , கேது நிற்கும் இடம் பொறுத்து தான் உச்சிஷ்ட கணபதி உபாசனை சித்தி அளிக்கும். அதே போல சித்த உடல் அமைப்பு கொண்டவர்கள் அதாவது முழங்காலில் மச்சம் அமைப்பு கொண்டவர்கள்  உபாசனை செய்ய மிக விரைவில் சித்தி ஆகும் .

 வேறு எவருக்கும் தலை கீழ் நின்றாலும் உச்சிஷ்ட கணபதி சித்தி ஆகாது. இந்த ஒரு பூஜை மட்டும் முழுக்க முழுக்க பூர்வ புண்ணிய பாக்கியத்தை பொறுத்தே அமையும். ஏன் என்றால் இது மிக விசேஷமானது. அஷ்ட கர்மங்களும் ஆடலாம் இதனால். மிக பெரிய வசியத்தை கொடுக்கும் .

 உச்சிஷ்ட கணபதி உபாசகரை சுற்றி எந்நேரமும் மக்கள் சுற்றி கொண்டே இருப்பார்கள். இவர்கள் செய்யும் அனைத்து அஷ்டகர்மங்களை சித்தி ஆகும். முக்காலம் உணரும் தன்மை உண்டாகும்.

 அதர்வ வேதத்தில் பின் வருமாறு கூற படுகிறது. உதாரணமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோர் இந்த உபாசனை செய்து மந்திரம் ஜெபித்து விளையாட வெற்றி கிடைக்கும்.  ஆற்று நீரை எடுத்து வந்து 37 முறை ஜெபித்து பின்பு அந்த நீரால் முகம் கழுவி செல்ல காண்போர் அனைவரும் வசியமாவார் . பெண்ணின் காலடி மண் எடுத்து 12000 ஜெபம் செய்ய அவள் நிரந்தரமாக வசியமாவள். எங்கிருந்தாலும் உடனே வருவாள் .  எலும்பு துண்டில் ஜெபம் செய்து பெண் மீது வீச அவள் வசியமாவாள் ,  குயவன் மண் ஒரு பெண்ணின் இடது கால் மண் எடுத்து கணபதி பதுமை செய்து  ஜெபித்து வேப்பம் குச்சியுடன் சேர்த்து புதைக்க அவள் பைத்தியமாவாள் , ஏதாவது தீராத கஷ்டம் வந்தால் வெள்ளெருக்கு  வேப்பம் குச்சி இதில் கணபதி பதுமை செய்து சிவப்பு சந்தனம் அல்லது செம்மலர் கொண்டு பூஜித்து அதை கள் பாத்திரத்தில் வைத்து பூமியில் ஒரு கையளவு கீழே புதைத்து அதன் மீது பகலும் இரவும் மந்திரம் ஜெபித்து வந்தால் ஒரு வாரத்தில் சகல பீடையும் ஒழியும் சத்ருக்கள் வசியமாவார். தன தான்யம் வந்து குவியும்  , துஷ்ட பெண்ணின் இடது கால் மண் தனது உடல் அழுக்கு மூத்திரம் குயவன் மண்  இவற்றால் கணபதி பதுமை செய்து கள் பாத்திரத்தில் வைத்து பூஜித்து அதன் மீது அக்னியை வைத்து அரளி பூவால் 1000 முறை மந்திரம் சொல்லி ஆகுதி செய்ய அவள் தாசியாவாள்.   இவரை கொண்டு ஆகாதா காரியமில்லை  மாந்த்ரீகருக்கு இவர் ஒன்றே போதும் இவரை வைத்தே சகல காரியங்களும் செய்யலாம். ஆனால் முன்பிறவியில் மாந்த்ரீக சித்த முறையில் அல்லது அந்த வம்சா வழியில் வந்தவருக்கு மட்டுமே இது சித்திக்கும். 

மேலும் உச்சிஷ்ட கணபதி மந்திரங்களை தகுந்த  பரீட்சை செய்த சீடர்களுக்கும் தனது வாரிசுகளுக்கும்  மட்டுமே கொடுக்க வேண்டும்  பிறருக்கு கொடுக்கலாகா என்ன கணேச கல்ப நூல் சொல்கிறது.

திபெத்திய லாமாஸ் (தாரா) தேவதை உச்சிஷ்ட கணபதியின் மடியில் இருப்பவர் 

லாமாஸ் என்று திபெத்திய மொழியில் அழைக்கப்படும் தாரா தேவதை மிக அழகிய உருவத்தில் காணப்படுவார்  . 

"தாரே துத்தாரே துரே ஸ்வாஹா "  என்பது இவருடைய மந்திரம் ஆகும். இந்த ஒரு மந்திரம் அஷ்டகர்மங்களையும் செய்யும் ஆற்றல் உடையது ஆகும்.  மந்திரம் ஒன்று தான்  ஆனால் பல காரியங்களை செய்யும். மந்திர ஜெபம் செய்யும் பொழுது தாராவை எந்த நிறத்தில் தியானிக்கிறோமா அந்த காரியம் நடக்கும் . 

வெள்ளை - வசியம் 
பச்சை - ஆகர்ஷணம் பண வரவு
சிவப்பு - ஸ்தம்பனம் 
மஞ்சள் - தனாகர்ஷணம் சொர்ணாகர்ஷணம் 
சாம்பல் - உச்சாடனம்  பேய் பூத உச்சாடனம் எதிரி உச்சாடனம் 
கருமை - பேய் , நோய்,பூத , மனித மாரணம் மற்றும் தீய காரியங்கள் செய்ய . 

மேற்கண்ட படி நமக்கு எந்த காரியம் தேவையோ அந்த நிறத்தில் தாராவை தியானிக்க வேண்டும் .  

மறைக்கபட்ட உச்சிஷ்டகணபதி மந்திரம்:
****************

ஒரு சொல் உச்சிஷ்ட கணபதி மந்திரம் ஓன்று உள்ளது. இதுமறைக்கபட்டது , வாமாச்சரம் மந்திரத்தின் ஒரு வகை. இதற்கு இயமம் நியமம் தேவை இல்லை. இந்த மந்திரத்தை எந்த நிலையிலும் எல்லா நேரத்திலும் உச்சரிக்கலாம்.

இதனுடய பெருமை பயன்படுத்தி பார்த்தால்தான் தெரியும்.

காரிய தடை விலக
காரிய சித்தி
இஷ்டசித்தி கொடுக்க வல்ல அற்புதமான மந்திரம்
பிரிந்த தம்பதிகள் ஓன்று சேர
மூலாதாரம் சரிவர இயங்க
அனைத்து ஐஸ்வரியமும், 
சுபிட்சமும் உண்டாக...
                மனதிற்குள் ஜெபித்து வர குடும்ப வாழ்வில் அமைதி கிடக்கும். அனைத்து வல்லமைகளும் கிடைக்கும்.

ஓம் ஹஸ்தி பிசாச்சி லிகே சுவாகா
(om hasthi pesaCHee leekyey swaha)
                         (உரு 16000)

அனைவருக்கும் அறிந்த உச்சிஷ்ட கணபதி மந்திரம்.
********************
ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்திமுகாய,
லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரோம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா.

பூஜை பிரயோக முறை 
*********

வெள்ளெருக்கு வேரில் செய்த விநாயகர் சிலையை அருகம்புல்லால்  மந்திரம் உச்சரிப்பு செய்ய செய்ய மந்திரம் உரு ஏறும்.  இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வர சகல சௌபாக்கியங்களும் ஏற்படும். நல்ல மணம் உள்ள மலர்களை கையில் வைத்து கொண்டு  உத்திஷ்ட கணபதி   மந்திரம் ஜெபித்து உச்சிஷ்ட கணபதியை வணங்க  அனைத்து வல்லமைகளும் உடனேயே  கிடைக்கும்.  உச்சிஷ்ட கணபதி சித்தி செய்தவர்கள் மட்டுமே இந்த பூஜை செய்ய வேண்டும். சக்தி பூஜை நிச்சயம் செய்ய வேண்டும்.  ஏற்கனவே உச்சிஷ்ட கணபதி சித்தி செய்தவர்களிடம் மந்திரம் உபதேசம் பெற்று செய்து கொள்ளலாம்.  மாந்த்ரீக மற்றும் ஜோதிடர்களுக்கு மிக அருமையான பூஜை முறை இது. அஷ்ட கர்மங்கள் செய்யவும் ஜன வசியம் தொழில் வசியம் செய்யவும் உகந்தது. வேண்டிய காரியம் சீட்டில் எழுதி உச்சிஷ்ட கணபதி மற்றும் சக்தி தேவியை பூஜித்து வேண்டி கொள்ள எந்த காரியமானானாலும் நடக்கும். நியாய தர்மம் அறிந்து செயல்படவும்.