ஸ்ரீ யக்ஷராஜன் குபேரன் மந்திரம்,பிரயோகமும்

ஸ்ரீ யக்ஷராஜன் குபேரன் மந்திரம்,பிரயோகமும்

ஸ்ரீ யக்ஷராஜன் குபேரன் மந்திரம்,பிரயோகமும்

யக்ஷிணி மற்றும் யக்ஷர்களின் அரசன் ஸ்ரீ குபேர தேவன் ஆவார்.நம்மிடம் நம் ஹிந்து மத நூல்களில் யக்ஷிணிகளை உபாசனை செய்து பலனடையும் மந்திரங்கள் மட்டுமே உண்டு. நம் கிரந்தங்களில் குபேரதேவன் மந்திரங்கள் பல உள்ளன.குபேரதேவனைத் தவிர பிற யக்ஷர்களின் உபாசனை மந்திரங்கள் ஜைனர்களிடம் ரகசியமாக உள்ளன. எக்ஷணி மந்திரங்களைச் சிலரிடம் உபதேசம் பெற்று ஜெபித்து வருகிறேன் ஆனால் தீக்ஷை தரும் பொழுது சொன்னவிதமாக பலன்களோ தரிசனமோ கிட்டவில்லை என்று பலர் வருத்தம் தெரிவித்தனர்.அவர்களின் குறை தீரும் பொருட்டு இம்மந்திரத்தை வெளியிடுகிறேன்.இதை 12000 எண்ணிக்கை ஜெபம் செய்தால் மந்திர சித்தியாகிவிடும்.பின்,எந்த யக்ஷிணி மந்திரத்தை ஜெபம் செய்யும் முன்னும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்த பின் ஜெபம் செய்ய விரைவில் அந்த யக்ஷணி மனமகிழ்ந்து சாதகனுக்கு வேண்டுவன தந்தருள்வாள்.

மந்திரம் :-
ஓம் யக்ஷராஜ நமஸ்துப்யம் சங்கர ப்ரியபாந்தவ:|
காலா காலே மகா காலே யக்ஷிணி வசம்கா குரு ||

இம்மந்திரம் விரைவான முழுமையான பலன்களைத் தர ஜெபகாலங்களில் கடைப்பிடிக்கக் வேண்டியவை:-

1.பிரம்மச்சர்யம்
2.மௌன விரதம் இருக்கலாம்.அல்லது குறைவாக பேசவேண்டும்.
3.மது,மாமிசம்,புகையிலை தவிர்க்கவும்.
4.பகல் பொழுது தூங்கக்கூடாது.
5.இரவில் வெறும் தரையில் படுத்துத் தூங்கவேண்டும்.
6.நெற்றியில் மந்திரம் 3 தடவை ஜெபித்து சிகப்பு சந்தனம் அணிந்து கொள்ளவும்.