கலியுகமக்கள் பின்பற்ற வேண்டிய சித்தர் உபதேசங்கள்

கலியுகமக்கள் பின்பற்ற வேண்டிய சித்தர் உபதேசங்கள்

கலியுகமக்கள் பின்பற்ற வேண்டிய சித்தர் உபதேசங்கள்!!!

உலகம், காலம் என்ற சக்கர இயக்கத்தின் படி, சுழன்று கொண்டிருக்கின்றது; காலமோ நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன; 

அவை :
17,28,000 ஆண்டுகள் கொண்ட க்ருத யுகம்
12,96,000 ஆண்டுகள் கொண்ட திரோதா யுகம்
8,64,000 ஆண்டுகள் கொண்ட துவாபர யுகம்
4,32,000 ஆண்டுகள் கொண்ட கலியுகம்;

இதில் நாம் கலியுகாதி 5119 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்;எதிர்கால விஞ்ஞானம் இந்த யுகக்கணக்கினை கண்டுபிடிக்கும்; அதன் பிறகு, தற்போது இருக்கும் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலண்டர் முறை அழிந்துவிடும்;

நாம் இன்றைய காலகட்டத்தில் பணம் அல்லது அரசியல் அதிகாரத்தினை அடைய ஓடிக் கொண்டிருக்கின்றோம்; நாம் வாழ்ந்து வரும் காலத்திலேயே கொடூரங்களும், துரோகங்களும், போலி ஆன்மீக தலைவர்களும் பொதுமக்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆன்மீக நம்பிக்கையை சிதைத்து வருகின்றார்கள்; யார் உண்மையான ஆன்மீகவாதி? என்று கண்டுபிடிக்க முடியவில்லை;

வெகு சிலருக்கு மட்டுமே உண்மையான ஆன்மீக குரு கிடைத்து, அவரது வழிகாட்டுதலில் படி நிம்மதியான வாழ்க்கையையும், ஆன்மீக முன்னேற்றத்தையும் பெற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்;

ஒவ்வொரு மனிதனுக்கும் காரண குரு, காரிய குரு, வித்தை குரு, ஜன்மாந்திர குரு என்ற சத்குரு என்று நான்கு விதமான குருநாதர்கள் தேவை;
காரண குருவும், காரிய குருவும் சூட்சுமமாக நம்மை இயக்கிக் கொண்டு இருப்பார்கள்;

வித்தை குரு என்பது நாம் என்ன தொழில் செய்கின்றோமோ அதற்கு உரிய வாத்தியார் தான்; ஒவ்வொரு தொழிலையும் யாரும் சுயமாக கற்றுக்கொள்ள முடியாது; சைக்கிள் ஒட்டுவது முதல் மது பானம் தயாரிப்பது வரை; கோவிலில் பூஜை செய்வது முதல் வேறு உலகங்களுக்கு சூட்சும உடலுடன் பறந்து சென்று திரும்புவது வரை ஒவ்வொரு வித்தைக்கும் குருவாக இருப்பவரே வித்தை குரு;

இந்த மூன்று குருநாதர்களையும் அடையாளம் காண ஒரு சுலபமான வழியை அகத்திய மகரிஷியும், அவரது வம்சாவழியில் பிறந்த ஸ்ரீ இடியாப்ப சித்தரும் நமக்கு போதித்துள்ளார்கள்;
அதுதான் அண்ணாமலை கிரிவலம். . .

நமது இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் வந்துவிட்டால் நமது சத்குருவை நம்மால் நேரில் தரிசிக்க முடியும்; அவரை நேரில் சந்தித்து பேசியப் பின்னர், காரண குரு, காரிய குரு, வித்தைகுரு மூவரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும்;

1008 முறை அண்ணாமலை கிரிவலம் செல்வதற்கும் ஆத்ம பலம், பண வளம், தீவிரமான எண்ணம் மூன்றும் தேவை; இம்மூன்றையும் கிடைக்கச் செய்ய மிகவும் எளிமையானசில  வழிமுறைகளை பின்பற்றி வந்தால் போதும்;

இங்கே தரப்பட்டிருக்கும் வழிமுறைகளை குறைந்தது 3 ஆண்டுகள் வரையிலும், அதிக பட்சம் 10 ஆண்டுகள் வரையிலும் விடாப்பிடியாக பின்பற்றி வந்தாலே உங்கள் கர்மவினைகள் தீர்ந்து, அண்ணாமலை கிரிவலம் செல்ல வாய்ப்புகள் தேடி வரும்;

1.தூங்கி எழுந்ததும்,இரு உள்ளங் கைகளையும் பார்த்தவாறு “ஓம் உத்தாதலக மகரிஷிக்கு ஜெய்” என்று 9 முறை ஜபிக்க வேண்டும்; இதனால்,ஈசனது அருள் கிட்டிவிடும்; மூத்த தேவி என்ற மூதேவியின் அனுக்கிரகமும் கிட்டும்;

மூதேவியின் அனுக்கிரகம் கிட்டினால், மூதேவியின் ஆட்சி நமது வசிப்பிடத்தை விட்டு போய்விடும்;

$குளிக்காமல் சாப்பிட்டால் மூதேவி ஆட்சி வரும்;

$வீட்டுக்குள் நுழைந்ததும் துர்நாற்றம் வீசினால் மூதேவி ஆட்சி வரும்;

$ தினமும் குளிக்கும்போது ஆடையில்லாமல் குளித்தால் மூதேவி ஆட்சி வரும்;

$ தினமும் குளிக்கும் போது உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தாமல் இருந்தால் மூதேவி ஆட்சி வரும்;

$ தினமும் தூங்கும் போது உள்ளாடை கூட அணியாமல் தூங்கினாலும் மூதேவி ஆட்சி வரும்;

$ தொடர்ந்து 3 நாட்களுக்கும் மேலாக ஒரே ஆடையை அணிந்தால் மூதேவி ஆட்சி வரும்;

$ தினமும் சுய இன்பம் செய்தால் மூதேவி ஆட்சி வரும்; இதில் முற்பிறவி சாபங்களும் காரணமாக இருந்திருக்கும்;

$ வீட்டில் பொருட்கள், புத்தகங்கள், ஆடைகள் அடுக்கி வைக்கப்படாமல் இருந்தால் மூதேவி ஆட்சி வரும்;

$ இங்கே விவரிக்க முடியாத சில அடாத செயல்களைச் செய்தாலும் மூதேவி ஆட்சி வரும்;

           ***********

2.மேற்கு நோக்கி பல் துலக்க வேண்டும்; பாம்பு விரல் கொண்டு பல் துலக்க வேண்டும்; பிரஷ்ஷைப் பயன்படுத்தினாலும்,சில நிமிடங்கள் கண்டிப்பாக பாம்புவிரல் (விரல்களில் நீளமானது) கொண்டு பல் துலக்கியே ஆக வேண்டும்;

$ கிழக்கு அல்லது வேறு எந்த திசையை நோக்கி பல் துலக்கினாலும் சாபம் உண்டு; ஒரு பெரிய புராணக் கதையும் உண்டு;

          *********

3.கிழக்கு நோக்கி சாப்பிட்டால் கல்வி வளரும்;.மேற்கு நோக்கி சாப்பிட்டால் செல்வம் பெருகும்;.வடக்கு நோக்கி சாப்பிட்டால் நோய் பெருகும்; தெற்கு நோக்கி சாப்பிட்டால் தேவையற்ற அவமானங்கள் வரும்; (ஒரு போதும் அழியாத புகழ் வராது)

$ இது நாம் வசிக்கும் வீட்டிற்கு மட்டுமே பொருந்தும்; உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளில் சாப்பிடும் போது மேற்கு நோக்கி சாப்பிட்டால் அவர்களுடன் பகை வரும்; உணவகங்களில் இந்த விதிமுறை பொருந்தாது;

              *********

4.தெற்கு நோக்கி ஆடைகளை துவைத்தாலும் வேண்டாத ஏச்சுகளும், பேச்சுக்களும் நம்மைத் தேடி வரும்;

               ***********

5.கண்களில் கறுப்பு மச்சம் உள்ளவர்கள், நாக்கில் கறுப்பு மச்சம் அல்லது மச்சங்கள் உள்ளவர்கள், எப்போதும் நெகட்டிவ்வாகப் பேசிக் கொண்டு இருப்பவர்கள், கூடாத நாட்களில் பிறந்தவர்கள்=இவர்களிடம் ஒரு போதும் பழகக்கூடாது;

               **********

6.இப்பிறவியில் ஒரே ஒருமுறை கூட நீங்கள் அண்ணாமலை கிரிவலம் செல்லாமல் வாழ்ந்திருந்தால், உங்களுடைய முன்னோர்களின் அருளாசி உங்களுக்கு போதுமான அளவு இன்னும் கிடைக்கவில்லை என்று தான் அர்த்தம்;

              ***********

7.தினமும் அன்னதானம் ஒரு துறவிக்காவது செய்ய வேண்டும்; இயலாத பட்சத்தில், வியாழக்கிழமை தோறும் அன்னதானம் செய்யலாம்; அதுவும் இயலாத பட்சத்தில் அமாவாசை தோறும் அன்னதானம் செய்யலாம்;

               ***********

8.வறுமையும், பண நெருக்கடியும் தீர தினமும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவ அஷ்டகம் 33 முறை வீட்டுப்பூஜை அறையில் ஜபித்து வர வேண்டும்; தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஜபித்துவர நமது ஜாதகத்தில் இருக்கும் நவக்கிரக தோஷங்கள், சாபங்கள் நீங்கி செல்வ வளம் தேடி வரும்;

             ************

9.வாரம் ஒரு நாள் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்; அல்லது மாதம் ஒருமுறை குலதெய்வ கோவில் சென்று வழிபடலாம்; அல்லது 90 நாட்களுக்கு ஒருமுறை நேரில் சென்று வழிபட்டே ஆக வேண்டும்; குலதெய்வ வழிபாடு ஆண்டுக்கு ஒருமுறை செய்து வந்தால் அந்த தெய்வத்தின் அருள் சிறிது மட்டுமே கிட்டும்;

                ************

10.மொத்தம் 32 வகையான தானங்கள் செய்ய வேண்டும் என்று வேதங்களும்,சைவ சித்தாந்தங்களும் தெரிவிக்கின்றன; இதில் 

$அன்னதானம்,

$ஆடை தானம், (சாதுக்களுக்கு காவி வேட்டியும், துண்டும்; ஏழைகளுக்கு வேட்டி, சேலை, துண்டு, விரிப்பு)

$பழ தானம்,

$ருத்ராட்ச தானம்,

$பூ தானம், (கோவில் பூஜைகள், விழாக்களுக்குத் தேவையான பூக்களை தானம் செய்தல்)

$கோ தானம், (ஒருபோதும் ஜெர்ஸிப் பசுவை தானம் செய்யக் கூடாது; அதனால் சிறிதும் கூட புண்ணியம் கிட்டாது; ஏனெனில்,அது செயற்கையாக இலுமுனாட்டிகளால் உருவாக்கப்பட்ட கலப்பு இனம்)

$கன்னிகா தானம் (நம் மகளுக்கு நமது செலவில் திருமணம் செய்து வைப்பது / மகள் இல்லாதவர்கள் உறவினரின் மகளுடைய திருமண முயற்சிக்கு நேரடியாக உதவுவது),

 $எண்ணெய்தானம், (ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொருவிதமான எண்ணெய்கள் அபிஷேகம் செய்யத் தேவைப்படுகின்றன)

$விருட்ச தானம் (கோவிலுக்குள் அல்லது கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் வில்வமரம், மா மரம், வன்னி மரம், வேப்ப மரம் போன்றவைகளை நட்டு மூன்று ஆண்டுகள் வரை பராமரிப்பது),

$விஷய தானம் ( ஆன்மீக கருத்துகளை பரப்புவது),

$சொர்ண தானம் (ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு தாலி செய்து கொடுப்பது அல்லது தெரிந்த கோவிலில் ஐம்பொன் சிலை / தங்கத்தால் சிலை செய்யும் போது தங்கப் பாளம் தானம் செய்வது; தங்க ரதம் செய்ய தங்கப் பாளம் தருவது)

$புண்ணியத்தை தானமாக பெறுவது ( வில்லங்கம் இல்லாத உறவினர்களை காசி, கயா, கேதார்நாத், பத்ரிநாத் போன்ற ஆலயங்களுக்கு நமது சொந்தச் செலவில் அழைத்துச் செல்வது),

$தண்ணீர் தானம்

$குடை தானம்

$காலணிகள் தானம்

$வென்னீர் தானம்

$பூமி தானம் (விவசாயத்திற்கு இலவசமாக இடம் தானம் செய்தல், ஏழைகளுக்கு இலவசமாக இடம் கொடுத்து அதில், அவர்கள் விரும்பும் விதமாக வீடு கட்டித் தருதல்)

$கல்வி தானம் (படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கட்டணம், கல்விக் கருவிகள், சீருடை தயார் செய்துதருதல்)

$ஊனமுற்றோர்களுக்கு வாகன தானம்

$கண் பார்வைக்குரிய கருவிகள் தானம்

இப்படிச் செய்து வந்தால், 32 வகையான தானங்கள் செய்த புண்ணியம் மலையளவு திரண்டு வாழ்க்கையில் சகல சுகபோகங்களும் கிடைக்கும்; அப்படி கிடைக்கும் சுகபோகங்களும் கிட்டியப் பின்னர், மனம் உடல் சுகத்தைத் தேடி ஓடாமல் நின்றுவிடும்; உள் நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடும்;

அப்படி மனம் உள்நோக்கிச் செல்ல ஆரம்பித்தால், நமது மனம் நமது ஆத்மாவுடன் ஒன்ற ஆரம்பிக்கும்; நான் யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்க ஆரம்பிக்கும்; நாம் எங்கிருந்து வந்தோம்? என்ற சூட்சுமம் புரிய ஆரம்பிக்கும்; இதற்குத்தான் ஆத்ம விசாரம் என்று பெயர்;

இதன் அடுத்த நிலைகள் குரு மூலமாக உணரவேண்டியவை ஆகும்; சீடன் தயாராகும் போது குரு தோன்றுவார்;

                 **********

11.சாட்சி இல்லாத உண்மையை இன்று விளையாட்டுத்னமாக வீடியோ எடுப்பதும், அதை விளையாட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடுவதும் சர்வசாதாரணமாக தமிழ்நாட்டிலேயே டீன் ஏஜ்ஜினர் செய்து வருகின்றார்கள்; இதன் மூலமாக உங்களது பிறவிகளின் எண்ணிக்கையை பல கோடி மடங்கு அதிகப்படுத்திவிடுகின்றீர்கள்;

ஏற்கனவே,நீங்கள் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப இன்னும் 22,000 முறை மனிதப்பிறவிகள் எடுக்க வேண்டும் என்று இருக்கும்; இந்த விளையாட்டுத்தனமான காரியத்தினால் உங்கள் பிறவிகளின் எண்ணிக்கை 3,00,22,000 என்று உயர்ந்துவிடும்;

            **********

12.சும்மா இருக்கும் மனதில் பொறாமை, ஏக்கம், பழிவாங்கும் உணர்ச்சி என்று ஏதாவது உருவாகிக் கொண்டே இருக்கும்; இதைச் சரி செய்யவே ஒவ்வொரு நொடியும் மந்திர ஜபம் செய்யும் படி வலியுறுத்துகின்றோம்; கணபதி மந்திரத்திற்கு எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது; கணபதியில் அஷ்ட கணபதி மந்திரத்தை நேரில் வந்து உபதேசம் பெறவும்;

             **********

13.கொஞ்சம் பக்குவப்பட்டதும் சிவ மந்திரம் அல்லது மஹா கால பைரவ மந்திரம் அல்லது மஹாவராகி மந்திரம் அல்லது 108 வகையான காளிகளில் ஒரு மந்திரம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;

             ************

14.மந்திரங்கள் சாபங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன; எனவே, அசைவம், மது இரண்டையும் 3 ஆண்டுகள் வரை கைவிட வேண்டும்; தினமும் ஒரு மணி நேரம் வரை ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் மஞ்சள் நிற விரிப்பில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு பின்வரும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்; ஜப எண்ணிக்கை 3 ஆண்டுகளுக்குள் 1,00,000 ஐ தாண்ட வேண்டும்;

சிவய நம- அம்-உம்- சிம்- கிலீம்- ஸ்ரீம்
ஓம் ரம் மம் யம் ஓம்

இம்மந்திரம் ஸித்தி ஆன பின்னர், மற்ற மந்திரங்களை ஜபிக்க ஆரம்பிக்கலாம்;

             **********

15.எண்ணங்களுக்கு வலிமை உண்டு; நல்ல எண்ணங்கள் எப்போதும் மென்மையாகவும், மெதுவாகவும் செயல்படும்; தீய மற்றும் ஆக்ரோஷமான எண்ணங்கள் படுவேகமாக செயல்படும்; என்று மனோதத்துவம் தெரிவிக்கின்றது;

எண்ண அலைகள் நீரின் மேல்புறமும், கோலத்தின் அடியிலும், கோவில் மூலவரின் பின்புறமும் படிகின்றது; அதனால் தான் நாம் பிறர் வீட்டிற்குச் சென்று தண்ணீர் அருந்த ஆரம்பிக்கும் முன்பு, அந்த தண்ணீரை கொஞ்சம் ஸிங்கில் ஊற்ற வேண்டும்; பிறகு அருந்த வேண்டும்; இதன் மூலமாக, அவர்களது எண்ணங்களின் தாக்கம் நம்மை சிறிதும் நெருங்காது; அதே போல வீட்டு வாசலில் போடப்பட்ட கோலத்தின் மீது குழந்தைகள் விளையாண்டு அழித்துவிட்டால் கோபப்படவேண்டியதில்லை; அக்குழந்தைகளுக்கும் கோலம் இட்டவர்களுக்கும், கோலம் எந்த வீட்டின் வாசலில் இருக்கின்றதோ அங்கேயும் நல்ல எண்ணங்கள் வந்து சேர்ந்துவிடும்;

எந்த கோவிலுக்குச் சென்றாலும் மூலஸ்தானத்தை சுற்றி வரும் போது மூலவரின் பின்பக்கத்தை தொட்டு கும்பிட்டு வருவதால் நமது கோரிக்கைகள் நிறைவேறிவிடுகின்றன;

             *********

16.ஆடை இல்லாமல் குளிக்கும் பழக்கம் நம்மிடையே இருக்கின்றது; இந்த பழக்கத்தை கைவிடாவிட்டால் 40வயதுக்குப்பிறகு புத்தி பேதலிக்கும்; புத்தி பேதலித்தால் நாம் என்ன செய்கின்றோம்? என்பதே நமக்குத் தெரியாது; எனவே இன்று முதல் குளிக்கும் போது ஒரு ஆடையாவது அணிந்து குளிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள்; சித்தர் பெருமக்கள் நமக்காக கூறியிருக்கும் முக்கியமான உபதேசம் இது;

17.அசைவம், மது பழக்கம் இருந்தால் அது நமது கஷ்டங்கள், வேதனைகள் அதிகப்படுத்திட காரணமாக அமைந்துவிடும்; ஏனெனில் அசைவம், மது பழக்கம் உள்ளவர்களை சனிக்கிரகத்தினால் எளிதில் வசப்படுத்திட முடியும்; போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கும் இது பொருந்தும்;

18.மதமாற்றம் நுண்ணிய பயங்கரவாதம் தான்; ஒருவன் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு போய்விட்டால் அவனது/அவளது குலதெய்வம் சாபம் உடனே அவர்களை பீடிக்கும்; அடுத்தபடியாக அவனது/அவளது முன்னோர்களாகிய பித்ருக்களின் சாபமும் அவர்களை பீடிக்கும்; இதனால்,மதம் மாறிய ஆரம்பத்தில் பணம்,வசதிகள் என்று இருந்தாலும் சாபங்கள் செயல்பட ஆரம்பிக்கும் போது புதிய மதத்தின் தலைவரால் காப்பாற்றிட முடியாது;

2000 ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் இந்து மதம் மட்டுமே மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது; மதம் மாறுவதை தடுப்பதும், மதம் மாறியவர்களை மீண்டும் நமது மதத்திற்கு கொண்டு வருவதும் மிகப் பெரும் புண்ணியம் ஆகும்;

19. “காமம் புகும் முன்பு காயத்ரி மந்திர ஜபம் மனதில் புக வேண்டும்” என்பது சித்தர்களின் உபதேசம்; இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதிகளும் ஆதியில் பூணூல் அணிந்திருந்தார்கள்; விவசாயிகள், கொல்லர்கள்,பறை அடிப்பவர்கள், நெசவாளர்கள், க்ஷத்திரியர்கள் என்று அனைவருமே ஆதியில்  பூணூல் அணிந்து, காயத்ரி மந்திரம் தினமும் ஓதி வந்தார்கள்;

800 ஆண்டு கால இஸ்லாமியப் படையெடுப்பு இதை தகர்த்துவிட்டது; 300 ஆண்டு கால கிறிஸ்தவ ஆங்கிலேய படையெடுப்பு நமது பண்பாட்டில் இருந்து பிரித்துவிட்டது; ஆதாரம்;ஓஷொ எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள்;

எல்லோரும் தினமும் யோகா அல்லது ப்ராணயாமம் அல்லது சரக்கலை பயிற்சி தினமும் செய்து வர வேண்டும்;

             **********

20.குலதெய்வம் கோவில் மற்றும் ஊரில் இருக்கும் பழமையான கோவிலை பராமரிப்பு அல்லது புனர்நிர்மாணத்திற்கு யார் முயற்சி செய்தாலும் நம்மால் ஆன உதவிகள் செய்ய வேண்டும்; இதனால் நமது ஜாதகத்தின் படி இருக்கும் நீண்ட கால தோஷங்களின் உக்கிரம் 95% அளவுக்கு குறைந்துவிடும்;

                **********

21.வியாழக்கிழமை தோறும் மஞ்சள் நிற ஆடை அணிய வேண்டும்; சனிக்கிழமை தோறும் உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;

                **********

22.வியாழக்கிழமைகள் தோறும் அன்னதானம் செய்து வந்தால், மறு பிறவியில் நாடாளும் பதவி தேடி வரும்; பாழடைந்த கோவிலை புனர்நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்தால், நீண்ட காலம் நாடாளும் பதவியில் இருப்பீர்கள்;

                **********

23.ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன் என்பதுதான் நமது தமிழ்ப்பண்பாடு; இதுவே இந்துப் பண்பாடாக மாறவும் செய்தது; இதன் உள்ளார்த்தம் என்ன? இந்துப் பண்பாடுதான் தமிழ்ப் பண்பாடு; தமிழ்ப் பண்பாடுதான் இந்துப்பண்பாடு;

இதை நிர்மூலமாக்கும் வேலையைத்தான் இன்றைய இணைய தொழில் நுட்பமும்,செல் போன் தொழில் நுட்பமும் செய்து வருகின்றன; மேற்கு நாடுகளில் இருந்து நமது நாட்டில் பிரபலமாகும் எல்லா புதுமைகளும் பண லாபத்தின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டவை; மனித நேயத்தின் அடிப்படையில் ஒருபோதும் உருவாக்கப்படவில்லை;

உதாரணமாக ஃபேஸ்புக்கும், வாட்ஸ் அப்பும் நேரில் சந்திக்காமலேயே இருவரிடம் பகையையும், வெறுப்பையும் உருவாக்கி வருகின்றன; ஒற்றுமையை உருவாக்கவில்லை என்பதை உணருங்கள்; எனவே,ஓரளவுக்கு மேல் இவைகளுக்கு முக்கியத்துவம் தருவது பேராபத்தினைத் தரும்;

             **********

24.ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன் என்ற தத்துவத்திலும் மருத்துவம்+மனோதத்துவம்+ சமுதாய ஒற்றுமை போன்றவைகளை உள்ளடக்கிய ஆரோக்கியம் ஒளிந்திருக்கின்றது; இதை தகர்த்தால் மட்டுமே நமது பாரத நாட்டை மதமாற்றிடமுடியும்; இதற்கு மாற்று நாம் நமது குடும்பத்தோடு வாரம்/மாதம் ஒரு முறை கோவிலுக்குச் சென்று வழிபடுவதும் ,பண்புப் பயிற்சி முகாம்களுக்கு நமது குழந்தைகளை (15 வயது முதல் 25 வயதிற்குள்) அனுப்பி வைப்பது மட்டுமே!!!

                **********

25.புரிந்து கொள்வதும், விட்டுக் கொடுப்பதும் தான் கணவன்,மனைவி தத்துவம்; தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு ஒரளவாவது விட்டுக்கொடுக்கும் சுபாவம் இருக்கின்றது; இங்கிலீஷ் மீடியத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12 வரை படித்தவர்கள் பெரும்பாலும் தமது சிறு சிறு தவறுகளைக் கூட ஒப்புக்கொள்வதில்லை;

               ************

26.ஒரு போதும் வடக்கு நோக்கி தூங்குவது கூடாது; அது மூளையில் பலவிதமான பிரச்சினைகளை உருவாக்கி, மன நிலையை பாதிக்கின்றது; தூங்கும் போது, தூங்குபவரின் மூன்று முழம் தூரத்தில் செல் போனை ஆன் செய்து வைப்பது நன்று; அதன் கதிர்வீச்சு பலருக்கு ஞாபக மறதியை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றது;

ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் 5 மணி நேரம் வரை தூங்க வேண்டும்;

ஆடையில்லாமல் தூங்குவதும் மாபெரும் தவறு; ஆடையில்லாமல் போர்வையை போர்த்திக் கொண்டு தூங்குவதும் தவறு; காரணம் நமது குலதெய்வமும், நாம் தினமும் ஜபிக்கும் தெய்வமும் நள்ளிரவில் நம்மை பார்ப்பதற்கு சூட்சுமமாக வரும்; தினமும் வராது;வாரம் ஒரு நாள் வரும்; அது எந்த நாள் என்பது எவருக்கும் தெரியாது;

அப்படி வரும் போது ஆடையில்லாமல் தூங்கும் போது அந்த தெய்வீக சக்திக்கு வரம் தரும் எண்ணம் இல்லாமல் போய்விடுகின்றது; சித்தர்கள் பல நூற்றாண்டுகளாக ஆராய்ந்து சொன்ன தெய்வீக ரகசியம் இது;

             **********

27. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது ஒரு பழமொழி; நாம் இன்று தினமும் அவமானப்படுகின்றோம் என்றால் அதற்கு யாரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ காரணம் அல்ல; நமது முற்பிறவிகளில் 4 இல் நாம் செய்த திமிர்த்தனம் மட்டுமே காரணம்;

              ***********

28.எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்வது தவறு; தற்கொலைக்கு பிறரை தூண்டுவதும் மாபெரும் தவறு; தற்கொலை செய்பவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் மறுபிறவி அமைவது கிடையாது; பல தற்கொலை செய்த ஆவிகள் 6,000 ஆண்டுகள் வரையும் கூட பசியோடும், பட்டினியோடும் அலைந்து வருகின்றன;

                 ***********

29.யாரையும் எப்போதும் எதற்காகவும் ஏங்க வைக்க வேண்டாம்; அதுவும் பிறவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிடும்;

கிண்டல், முகனூல், வலைப்பூ வாசிப்பு அவசியம் தான்; புத்தகங்களில் தான் உண்மைத் தன்மை இருக்கின்றது; புத்தக வாசிப்புக்கு வாரம் ஒரு முறை நூலகம் செல்லவும்; அங்கே செல் போனை அணைத்துவைத்துவிட்டு வாசிப்புப் பழக்கத்தை தொடரவும்;

                   **********

30.யாரிடமும், எப்போதும், எதற்காகவும் இலவசமாக எதையும் வாங்கக் கூடாது; அப்படி வாங்கினால் பெருமளவு புண்ணியம் உங்களை விட்டுப் போய்விடும்;