அகத்தியர் சித்தர் தரிசனம்

அகத்தியர் சித்தர் தரிசனம்
agathiyar mantra

அகத்தியர் சித்தர் தரிசனம்
அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை ஆகும்.

ரிக் வேதத்தில்

அகத்தியர் மித்திர வருணரின் மகனும், வசிட்டரின் சகோதரரும் ஆவார். அகத்தியர் இருக்கு வேதம்|ரிக் வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை.

கம்பர் கருத்து கம்பராமாயண மூலம்

முச்சங்கம் பற்றிய வரலாற்றில் தலைச்சங்கப் புலவராக விளங்கியவர்.

அகத்தியம் என்னும் நூலை எழுதியவர். காலத்தால் தொல்காப்பியருக்கு முந்தியவர்            18 - சித்தர்கள்

சிறப்புப் பெயர்கள்

தமிழ் முனிவர் (தமிழ் இலக்கணம் அருளியதால்)

மாதவ முனிவர் (அதிக தவம் செய்ததால்)

மாமுனி (பெரிய முனிவர் என்ற பொருளில்)

குருமுனி (முனிவர்களுக்கெல்லாம் குருவானவர்)

திருமுனி (உயர்வுக்குரியவர்)

முதல் சித்தர் (18 சித்தர்களில் முதன்மையானவர்)

பொதியில் முனிவன் (பொதிகை மலையில் வாழ்ந்தவர்)

அமரமுனிவர் (இன்றுவரை பேசப்படும் முனிவர் என்ற பொருளில்)

பொதியவரை முனிவன் (பொதிகைமலை)

குடமுனி (குடத்தில் பிறந்தவர்)

சித்த மருத்துவ அகத்தியர்

அகத்திய முனிவர் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவமுறைகளை வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். இவரது பாடல்களில் பயின்றுவந்துள்ள சொற்கள் இவரைப் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கின்றன.

இனியவன் துரைமுருகன்

வரலாறு

சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக்கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் அழைக்கின்றனர்.

 சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர் தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார். 

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

இவை போல் அகத்தியரைக் குறித்து புராணங்களில் உள்ள கதைகள் பற்பல. 

அகத்தியரின் மாணவர்கள் 

அதங்கோட்டு ஆசான்

துராலிங்கன்

செம்பூண்சேய்

வையாபிகன்

வாய்ப்பிகன்

பனம்பாரன்

கழாரம்பமன்

அநவிநயன்

பெரிய காக்கைபாடினி

நத்தத்தன்

சிகண்டி

தொல்காப்பியன்

ஆகிய 12 பேரும் அகத்தியரின் மாணவர்கள் ஆவர் இவர்கள் 12 பேரும் சேர்ந்து "பன்னிரு படலம்" என்னும் நூலை எழுதினார்கள் இந்த செய்தியை புறப்பொருள்வெண்பாமாலை குறிப்பிடுகிறது

சித்த வைத்தியம்

அகத்தியர் சித்த வைத்தியத்திற்கு செய்த பணி சிறப்பானது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோசங்கள் பற்றி கூறியுள்ளார்.

அகத்தியர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:

அகத்தியர் வெண்பா

அகத்தியர் வைத்தியக் கொம்மி

அகத்தியர் வைத்திய ரத்னாகரம்

அகத்தியர் வைத்தியக் கண்ணாடி

அகத்தியர் வைத்தியம் 1500

அகத்தியர் வைத்திய சிந்தாமணி

அகத்தியர் கர்ப்பசூத்திரம்

அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்

அகத்தியர் வைத்தியம் 4600

அகத்தியர் செந்தூரம் 300

அகத்தியர் மணி 4000

அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு

அகத்தியர் பஸ்மம் 200

அகத்தியர் நாடி சாஸ்திரம்

அகத்தியர் பக்ஷணி

அகத்தியர் கரிசில் பஸ்யம் 200

சிவசாலம்

சக்தி சாலம்

சண்முக சாலம்

ஆறெழுத்தந்தாதி

காம வியாபகம்

விதி நூண் மூவகை காண்டம்

அகத்தியர் பூசாவிதி

அகத்தியர் சூத்திரம் 30

போன்ற நூல்களை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்

அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்

அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது பொதிகை ( அகஸ்தியர் கூடம் ) அடிவாரம் போறதுன்னு பாப்போம் .

திருவனந்தபுறத்துல இருந்து நெடுமங்காடு - விதுரா - போனகாடு பஸ் பிடிக்கணும், 3 மணி நேரத்துல அடிவாரம் போகலாம் , பஸ் நிக்கிற இடத்துல இருந்து 4 கிலோ மீட்டர் நடந்தா வன இலாகா அலுவலகம்  இருக்கும் இடம் பேர் போனக்காடு

அகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர். தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர். அகத்தியர் வாழும் இப்பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் சாகசப் பயணம் என்றும் கூறலாம்.

ஆபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை. 
 
 அகத்தியர் மலை அகத்தியரின் ஏகாந்த சிலை

மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி, நாக்கு வறண்டு, செங்குத்தான பகுதியில் கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம் அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும்.பனிபடர்ந்த அகத்தியர் மலை