பேசாப் பொருள் எனும் பிரம்ம ரகசியம்

தியான யோகம் நாசிமுனை மூக்கு நுனியா? ஆசனம்,உடம்பை எவ்வாறு வைத்துக் கொண்டு அமர வேண்டும் என்பன குறித்து விரிவான முறையில் இந்த அத்தியாயம் விவரிக்கிறது

பேசாப் பொருள் எனும்  பிரம்ம ரகசியம்

தியான யோகம் நாசிமுனை மூக்கு நுனியா?
-------------------------------------------------------
இந்து தருமத்தில் தியானம், யோகம், நிஷ்டை, பிராணாயாமம் பயில விரும்புவோருக்கு கீதையின் ஆறாவது அத்தியாயமே வழிகாட்டியாகும்.

தனிமையான இடம், ஆசனம்,உடம்பை எவ்வாறு வைத்துக் கொண்டு அமர வேண்டும் என்பன குறித்து விரிவான முறையில் இந்த அத்தியாயம் விவரிக்கிறது.

ஸ்லோகம் 13:
ஸமம் காய- சிரோ-க்ரீவம்
தாரயன்-னசலம்- ஸ்த்திர:|
ஸம்ப்ரேஷ்ய நாஸிகாக்ரம்
ஸ்வம்-திசச்-
சானவலோகயன்||

அதாவது  உடம்பு,தலை, கழுத்து இவற்றை நேராக வைத்துக் கொண்டு, உறுதியாக அமர்ந்து, சுற்றும்முற்றும் பார்க்காமல்
( ஸம்ப்ரேஷ்ய நாஸிகாக்ரம்)
தன்னுடைய மூக்கு நுனியையே பார்த்து கொண்டிருக்க வேண்டும்.

இதில்" நாஸிகாக்ரம்" என்ற சொல்லே மிகவும் முக்கியமானது.இச்சொல் பரிபாஷை- மறைமொழியாகும்

நாஸிகாக்ரம் என்பதற்கு மூக்கு நுனி எனப் பொருள் கொள்வது சரியல்ல.
நாசிமுனை என்ற சொல் இங்கு மூக்கு நுனியையும் குறிக்க வில்லை.

இதே நாசி என்ற சொல் தமிழ் மறைகளிலும் பயின்று வருகிறது.

"நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்து.."என்றும்," நயனம் இரண்டும் நாசிமேல் வைத்து.." என்றும் திருமந்திரத்தில் சொல்லப் பெற்றுள்ளது.

இனி" நாசி முனை" என்ற சொல் குறிக்கும் பொருள் விளக்கம் காண்போம்.

" முச்சுடர் வட்டமே சக்கரமாம்
   அது
   மூக்கு நுனியில் சுழிமுனையாம்"
       - மதுரை வாலைசாமி

"நாசிநுனி நடுவான பூரணத்தைக் கண்டால்
நலமான நால்பதமும்
நண்ணுங் காணே"
                - அகத்தியர்

"நாசி நுனியில்  நயனத்திடை
வெளியில்
தேசிகனார் ஆடும் திருநடனம்"
                   - குணங்குடியார்

முச்சுடர் வட்டமான அந்த வெட்டாத சக்கரமே சுழிமுனையாகும்.
அதுவே நாசிமுனை எனும் மூக்கு நுனியாகும் .

" சோதி என்ற நாசிமுனை பாழ்போகாது"என்று மெய்வழி ஆண்டவர்களும் தாம் அருளிய மெய்வழி நூல் பாடலில் குறிப்பிடுகிறார்கள்.
நாசிமுனை ஒளிமயமானது
எனும் பொருளில் தான் சோதி என்ற நாசிமுனை என்று பாடியுள்ளார்கள்.

ஆதிசங்கரரும் தாம் அருளிய
"அபரோக்ஷானுபூதி"எனும் கிரந்தத்தில்"ந நாஸாக்கராவ லோகீனீ" என்கிறார்.

"ஸா த்ருஷ்டி: பரமோதாரா ந
நாஸாக்ராவ லோகீனீ"
- தேஜோபிந்து உபநிஷத்

திருஷ்டியை ஞானமயமாக்கி
உலகை பிரம்ம மயமாகப் பார்க்க வேண்டும்.அதுதான் திருஷ்டியின் சிறந்த நிலை.
அதாவது மூக்கு நுனியில் பார்ப்பது கூடாது என்கிறது.

"சோதியென்ற சுழிமுனையைத்
தியானம் செய்து..."
 - காகபுசுண்டர்

"சுழித்தொரு சுழினையிலே
சோதி காணும்"
     -அகத்தியர்

சோதி மயமான சுழிமுனையில் மனம் லயமாகி நிற்றலே தியானமாகும்.

நாசி முனை என்பது மூக்கு முனையன்று.
நாசி எனில் இருள் நாசமாகும்- நசிக்குமிடம் நாசிமுனையே சோதி மயமான சுழிமுனை- அறிவின் முனை- வாசி முனையாகும்.

சமய உலகம் அறிந்திராத இந்த தேவ ரகசியத்தை பிரம்மத்தை அறிந்த மெய்வழி குழந்தைசாமி கவுண்டர் அவர்கள் எங்களுக்கு வெளியாக்கி-சோதிமயமான சுழிமுனையில் மனம் லயித்து நிற்கும் தியானம் பழகும் வித்தையைப் பயிற்றுவித்தார்கள். ஊன்றிப் படித்தால் நீங்களும் தெளிவு பெறலாம்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0